Thursday, July 23, 2026

⭐ காலை & மாலை அத்கார் ⭐

 ☀️ *அல்ஹம்துலில்லாஹ்!* 🌙

⭐️ *காலை & மாலை அத்கார் – முழு PDF* 


✨ *சிறப்புகள்:*

*அரபி • தமிழ் உச்சரிப்பு • தமிழ் பொருள் • சிறப்புகள் • ஆதாரங்கள் • ஓதும் எண்ணிக்கை*


(Download link -  https://drive.google.com/file/d/1XcDIRmzIHARhAWsD0kWPvz9r-9YjaBBV/view?usp=drivesdk )


📥 தினமும் ஓதி பயன்பெறுங்கள்; பிறருக்கும் பகிருங்கள்.



Friday, August 21, 2020

அல்லாஹ்வின் பெயர்கள் - Names of allah With proof

 

🕋💭🌹🕋💭🌹🕋

*அஸ்மா-உல்-ஹுஸ்னா - அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் - ஆதாரப்பூர்வமானவை மட்டும்*

*பெயர்கள் உச்சரிப்புடன் இறுதியில் - அரபி/தமிழ்(அர்த்ததுடன்)/English(with meaning)*

FB : https://m.facebook.com/story.php?story_fbid=160972498994641&id=100052456744456

🎊🌳🌈🌳🌈🎊

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது *திருப்பெயர்கள் உள்ளன*. அவற்றை அறிந்து (அதன் மீது ** *நம்பிக்கை வைத்து* ** அதை நினைவில்) கொள்பவர் *சொர்க்கத்தில் நுழைவார்*
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2736.
அத்தியாயம் : 54. நிபந்தனைகள்

🎊🌳🌈🌳🌈🎊

*குர்ஆன்-ஹதீஸ்* ஒளியில் இருந்து மட்டும் உறுதி செய்யபட்ட ஆதாரப்பூர்வமான பெயர்கள்!!! பல மக்கள் *ஆதாரமற்ற பெயர்களை மனனம்* செய்து அதற்கான பலனை மறுமையில் அடையமுடியாமல் போகக்கூடாது என்ற நோக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது!!! அல்ஹம்துல்லிலாஹ்

இந்த அறிஞர்களின் பயான்களில் இருந்து தொகுக்கப்பட்டது!!!

1. Dr. முபாரக் மதனி - அஸ்மாஉல் ஹுஸ்னா தொடரில் - https://www.youtube.com/playlist?list=PLgeZ-leMyCi4bzjSDdapqH6xDxP0mtgZr

மற்றும்

2. மவ்லவி. அஸ்ஹர் ஸீலானி - https://youtu.be/eyGewPWDCtY

*99துக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. ஏனெனில் முஹம்மது(ஸல்) 99 பெயர்கள் எது என்று குறிப்பிடவில்லை!!!*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*நான் சுவர்க்கம் போக ரெடி!!! நீங்க!!!*

*بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ*‎

*رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏* 

ரப்பி 'ஸி'த்னி 'இல்மா

Rabbi 'zidni 'ilma

*“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” (அல்-குர்'ஆன் - 20:114)*

*“O’My Rabb! Increase me in Knowledge” (Surah Ta-Ha; 20:114)*

*உச்சரிப்பு :*

'அ , 'இ - ع  - 'A
'ஹ    - غ  - G
"ஹ   - خ  - Kha
'ஸ     - ز   - 'Z
"ஸ    - ث - Th
ழ       - ظ,ض - Z
'த      - د   - D
ஃப    - ف - F
ஷ    - ش - Sh
'க.     - ق - Q
ஜ.     - ج - J
''த.     - ذ.- ''D

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

1. *الله* 

அல்லாஹ் - வணக்கத்திற்குரிய ஒரே இறைவன்

Allah - God

2. * الإله*

அல்-இலாஹ் - வணங்கத்தகுதியான ஒரே இறைவன்

Al-ilaah - The One Who Alone Deserves to be Worshiped

3. *الحَيّ*

அல்-ஹய்யு - என்றென்றும் உயிருடன் இருப்பவன்

Al-Hayy - The Ever Living

4. *القَيُّوم*

அல்-'கைய்யூம் - என்றென்றும்
நிலைத்திருப்பவன்

Al-Qayyoom - The Self Sustaining

5. *الرَّبّ*

அர்-ரப் - படைத்து பரிபாலிப்பவன்

Ar-Rabb - The Lord and Nurturer

6. *الرَّحْمَٰنِ*

அர்-ரஹ்மான் - அளவற்ற அருளாளன்

Ar-Rahmaan - The Extremely Merciful

7. *الرَّحِيم*

அர்-ரஹீம் - நிகரற்ற அன்புடையோன்

Ar-Raheem - The Bestower of Mercy


8. *الْمَلِكُ*

அல்-மலிக் -  பேரரசன்

Al-Malik - The King

9. *القُدُّوس*

அல்-'கு'த்'தூஸ் - மிக பரிசுத்தமானவன்

Al-Quddoos - The Pure & Perfect

10. *السّلام*

அஸ்-ஸலாம் - சாந்தி அளிப்பவன்

As-Salaam - The Flawless One

11. *المؤمن*

அல்-முஃமின் - தஞ்சம் அளிப்பவன்

Al-Mu'min - The Guardian of Faith

12. *المهيمن*

அல்-முஹைமின் - கண்கானிப்பவன்

Al-Muhaymin - The Giver of Protection

13. *العَزِيز*

அல்-'அ'ஸீ'ஸ் - யாவற்றையும் மிகைத்தவன்

Al-‘A'zee'z - The Almighty

14. *الجَبَّار*

அல்-ஜப்பார் - அடக்கியாளுபவன்

Al-Jabbaar- The Compeller

15. *المُتَكَبِّر*

அல்-முதகப்பிர் - பெருமைக்கு உரியவன்

Al-Mutakabbir - The Justly & Rightfully Proud

16. *الخَالِق*

அல்-"ஹாலிக் - படைப்பவன்

Al-Khaaliq - The Creator of Everything

17. *البارِئ*

அல்-பாரி' - ஒழுங்கு செய்பவன்

Al-Baari' - The Originator

18. *الْمُصَوِّرُ*

அல்-முஸவ்விர் - உருவம் அமைப்பவன்

Al-Musawwir - The Bestower of Forms

19. *الأوَّلُ*

அல்-அவ்வல் - முதலாமானவன்

Al-Awwal - The First

20. *الآخِر*

அல்-ஆ"ஹீர் - இறுதியானவன்

Al-Aakhir - The Last

21. *الظاهِر*

அழ்-ழாஹிர் - பகிரங்கமானவன்

Az-zhaahir - The Most High

22. *البَاطِن*

அல்-பாதின் - மறைமுகமானவன்

Al-Baatin - The Most Near

23. *الغَفُور*

அல்-'ஹஃபூர் - தொடர்ந்து மன்னிப்பவன்

Al-Ghafoor - The One Who Forgives Extensively

24. *الحافِظ*

அல்-ஹாஃபிழ் - பாதுகாப்பவன்

Al-Haafiz - The Protector

25. *الخَبِير*

அல்-"ஹபீர் - நன்கறிந்தவன்

Al-Khabeer - The Fully Aware

26. *العَلِيم*

அல்-'அலீம் - அனைத்தையும் நன்கறிந்தவன்

Al-‘Aleem - The All Knowing

27. *الكَبِير*

அல்-கபீர் - மிகப்பெரியவன்

Al-Kabeer - The Magnificent/Grand

28. *المُتَعَالِي*

அல்-முத்த'ஆலீ - மிக உயர்ந்தவன்

Al-Muta’aalee - The Supreme

29. *المَلِيك*

அல்-மலீக் - தீர்ப்பு நாளில் அதிபதி

Al-Maleek - The Supreme Sovereign

30. *المُقْتَدِر*

அல்-மு'க்த'தீர் - வலிமை மிக்கவன்

Al-Muqtadir - The Creator of All Power

31. *الأحَد*

அல்-அஹ'த் - ஒருவன்

Al-Ahad - The One/Unique

32. *الشَّهِيد*

அஷ்-ஷஹீ'த் - சாட்சியாளன்

Ash-Shaheed - The Witness

33.*الوَاحِد*

அல்-வாஹி'த் - தனித்தவன்

Al-Waahid - The One & Only

34. *القَهَّار*

அல்-'கஹ்ஹார் - அடக்கி ஆள்பவன்

Al-Qahhaar - The Subjugator

35.  *الوَلِيّ*

அல்-வலீ - பாதுகாவலன்

Al-Waliyy - The Guardian

36. *الحَمِيد*

அல்-ஹமீ'த் - புகழுக்கு உரியவன்

Al-Hameed - The Praiseworthy

37. *المَولَى*

அல்-மௌலா - பாதுகாப்பவன்

Al-Mawlaa - The Master

38. *النَّصِير*

அந்-நஸீர் - உதவுபவன்

An-Naseer - The Helper

39. *الرَّقِيب*

அர்-ர'கீப் - கண்கானிப்பவன்

Ar-Raqeeb - The Watchful

40. *الصَّمَد*

அஸ்-ஸம'த் - எந்த வித தேவையுமற்றவன்

As-Samad - The Perfect Lord & Master Upon whom All of the Creation Depends.

41. *السَّمِيع*

அஸ்-ஸமீஃ - அனைத்தையும் கேட்பவன்

As-Samee' - The All Hearing

42. *البَصِير*

அல்-பஸீர் - அனைத்தையும் பார்பவன்

Al-Baseer - The All Seeing

43. * الحقّ*

அல்-ஹக் - உண்மையாளன்

Al-Haqq - The Truth

44. *المُبِين*

அல்-முபீன் - தெளிவு படுத்துபவன்

Al-Mubeen - The Evident

45. *اللَّطِيف*

அல்-லதீஃப் - நுட்பமானவன்

Al-Lateef - The Subtle & Kind

46. *التَّوَّاب*

அத்-தவ்வாப் - மன்னபளிப்பவன்

At-Tawwaab - The One Who Accepts the repentance

47. *الوَدُود*

அல்-வ'தூ'த் - மிக்க அன்புடையோன்

Al-Wadood - The Loving

48. *المَجِيد*

அல்-மஜீ'த் - மேன்மைமிக்கவன்

Al-Majeed - The Glorious

49. *الرَّزَّاق*

அர்-ர'ஸ்'ஸாக் - அனைத்தையும் வழங்குபவன்

Ar-Ra'z'zaaq - The Great Provider

50. *القَوِيّ*

அல்-'கவிய்யு - வல்லமை மிக்கவன்

Al-Qawiyy - The Strong

51. *المَتِين*

அல்-மதீன் - உறுதியானவன்

Al-Mateen - The Firm One

52. *الخير*

அல்-"ஹைர் - சிறந்தவன்

Al-khair - The All-prevailing one, The dominant over everything

53. *الحَسِيب*

அல்-ஹஸீப் - போதுமானவன்

Al-Haseeb - The Sufficient/ Ever-Reckoner

54. *الوَكِيل*

அல்-வகீல் - பொருப்பாளன்

Al-Wakeel - The Trustee

55. * الشَّكُور*

அஷ்-ஷகூர் - நன்றி பாராட்டுபவன்

Ash-Shakoor - The Appreciative

56. *الحَلِيم*

அல்-ஹலீம் - சகிப்பு தன்மை மிக்கவன்

Al-Haleem - The Forbearing

57. *الْبَـرُّ*

அல்-பர்ரு - பேருபகாரம் செய்பவன்

Al-Barru - The source of all goodness

58. *الشَاكِر*

அஷ்-ஷாகிர் - நன்றி உடையோன்

Ash-Shaakir - The Grateful

59. *الوَهَّاب*

அல்-வஹ்ஹாப் - பெரும் கொடையாளன்

Al-Wahhaab - The Bestower

60. *القَاهِر*

அல்-'காஹிர் - அடக்கி ஆள்பவன்

Al-Qaahir - The Subduer/Subjugator

61. *الغَفَّار*

அல்-'ஹஃப்ஃபார் - மிக்க மன்னிப்பவன்

Al-Ghaffaar - The Oft-Forgiving

62. *الفَتَّاح*

அல்-ஃபத்தாஹ் - மேலான தீர்ப்பாளன்

Al-Fattaah - The Judge

63. *الرَّؤُوف*

அர்-ரஊஃப் - மிகக் கருனையான்

Ar-Ra’oof - The Most Kind, The Tenderly Merciful

64. *النور*

அந்-நூர் - பிரகாசமானவன்

An-Noor - The Light, The Illuminator

65. *المُقِيت*

அல்-மு'கீத் - அனைத்தையும் கண்கானிப்பவன்

Al-Muqeet - The All Powerful Maintainer

66. *الوَاسِع*

அல்-வாஷிஃ - விசாலமானவன்

Al-Waasi’ - The Vast One

67. *الأعْلَى*

அல்-அஃலா - மிக உயர்வானவன்

Al-A’laa - The Most Exalted/ High

68. *الوَارِث*

அல்-வாரி"ஸ் - உரிமையான்

Al-Waarith - The Inheritor

69. *المُحِيط*

அல்-முஹீத் - சூழ்ந்து அறிபவன்

Al-Muheet - The All Encompassing

70. *العَلَّامُ*

அல்-'அல்லாம் - மறைவானவற்றை அறிந்தவன்

Al-‘Allaam - The Most Knowing,The All-and-Ever-Knowing

71. * المُسْتَعَانُ*

அல்-முஸ்த'ஆன் - உதவி கேட்க்கப்படுபவன்

Al-Musta’aan - The One whose help is sought

72. * القَرِيب*

அல்-'கரீப் - நெருகத்தில் இருப்பவன்

Al-Qareeb - The Ever Near

73. *المُجِيب*

அல்-முஜீப் - பதிலளிப்பவன்

Al-Mujeeb - The Responsive

74. *الكَرِيم*

அல்-கரீம் - கண்ணியமானவன்

Al-Kareem - The Most Noble & Generous

75. *الأكْرَم*

அல்-அக்ரம் - மிக கண்ணியமானவன்

Al-Akram - The Most Generous

76. *العَلِيّ*

அல்-'அலீ - மிக கம்பீரமானவன்

Al-‘Aliyy - The Sublime, Majestic

77. *الْعَظِيْمُ‏*

அல்-'அழீம் - மகிமை மிக்கவன்.

Al-'Azheem— The Magnificent, The Supreme Glory, the Greatest

78. *العَفُوّ*

அல்-'அஃபூ - திரும்ப திரும்ப மன்னிப்பவன்

Al-‘Afuww - The One Who Pardons Again & Again

79. *الحَكِيم*

அல்-ஹகீம் - நீதியாளன்

Al-Hakeem - The All-Wise

80. *الغَنِيّ*

அல்-'ஹனீ - எந்த தேவையும் அற்றவன்

Al-Ghaniyy - The Self Sufficient

81. *الكَفِيْل*

அல்-கஃபீல் - பொருப்பாளன்

Al-Kafeel - Guarantor, Surety

82. *الحَيِّي*

அல்-ஹய்யீ - வெட்க்கபடுபவன்

Al-Hayyee - The Modest

83. *السِّتِّير*   

அஸ்-ஸித்தீர் - மறைப்பவன்

As-Sitteer - The Coverer, the One who conceals

84. *المُسَعِّر*

அல்-முஸஃ'இர் - விலையை தீர்மானிப்பவன்

Al-musa'i'yir - decider of prices

85. *القابِض*

அல்-காபிழ் - பற்றிப் பிடிப்பவன்

Al-Qaabiz - The Withholder

86. *البَاسِط*

அல்-பாஸித் - விசாலப்படுத்துபவன்

Al-Baasit - The Expander

87. * الرَازِق*

அர்-ரா'ஸிக் - வழங்குபவன்

Ar-raa'zik - The provider

88. *المُقَدِّم*

அல்-மு'க'த்'தீம் - முற்படுத்துபவன்

 Al-Muqaddim - The One Who Gives Precedence

89. *المُؤَخِّر*

அல்-முஅ"ஹ்"ஹிர் - பிற்படுத்துபவன்

Al-Mu’akhkhir - The Delayer

90. *القَدِير*

அல்-'க'தீர் - பேராற்றல் உடையவன்

Al-Qadeer - The All Powerful

91. *السُّبُّوح*

அஸ்-ஸுப்பூஹ் - பூரனமானவன்

As-Subbooh - The Perfect

92. *الرَّفِيق*

அர்-ரஃபீ'க் - மென்மையானவன்

Ar-Rafeeq - The Gentle

93. *الطَّيِّب*

அத்-தய்யிப் - மிகச் சிறந்தவன்

At-Tayyib - The Pure One

94. *الحَكَم*

அல்-ஹகம் - தீர்பளிப்பவன்

Al-Hakam - The Judge, The Giver of Justice, The Arbitrator

95. *الدَّيَّان*

அ'த்-'தைய்யான் - விசாரனை செய்பவன்

Ad-daiyaan - The one who investigate

96. *الهادي*

அல்-ஹா'தீ - வழிநடத்துபவன்

Al-Haadi - The Guide, The Leader

97. *الخَلاّق*

அல்-"ஹல்லா'க் - திரும்ப திரும்ப படைபவன்

Al-Khallaaq - The Creator Who Creates Again & Again

98. *الشَّافِي*

அஷ்-ஷாஃபீ - குணப்படுத்துபவன்

Ash-Shaafee - The Healer

99. * المُعْطِي*

அல்-முஃதீ - கொடுப்பவன்

Al-Mu’tee - The Giver

100. *الوِتْر*

அல்-வித்ர் - ஒருவன்

Al-Witr - The One

101. *الطَّبِيب*

அத்-தபீப் - நோய் நிவாரனம் அளிப்பவன்

At-Tabib - The Doctor

102. *الجَمِيل*

அல்-ஜமீல் - மிக அழகாவன்

Al-Jameel - The Beautiful

103. *المَنَّان*

அல்-மன்னான் - பேருபகாரம் செய்பவன்

Al-Mannaan - The Benefactor

104. *السَّيِّد*

அஸ்-ஸைய்யி'த் - தலைவன்

As-Sayyid - The Lord & Master

105. *الصّادق*

அஸ்-ஸா'தி'க் - உண்மையாளன்

As-saadiq - The honest

106. *المُحسن*

அல்-முஹ்ஸின் - உபகாரம் செய்பவன்

Al-Muhsin - The Good Doer, The one who does ultimate good

107. *القَادِر*

அல்-'கா'திர் - வல்லமை மிக்கவன்

Al-Qaadir - The Fully Able One

108. *ذو الجلال والإكرام*

"துல்-ஜலாலி வல்-இக்ராம் - மிக்க கண்ணியமும் வல்லமையும் மிக்கவன்

''Dhul-Jalaali wal-Ikraam - The Possessor of Glory and Honour, The Lord of Majesty and Generosity

*الحمدلله*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Saturday, August 15, 2020

AUTOMATIC MAN - மனிதன்

 *بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ*

❗ *AUTOMATIC MAN* ❗  - *மனிதன்!!!*  🦾 🦿 👤 *(பிரமிக்க வைக்கும் தஃவா Article)*


*FB* - https://m.facebook.com/story.php?story_fbid=158233365935221&id=100052456744456&fs=1&focus_composer=0

*1) மனிதன் உடலில் 24 மணி நேரமும் நடக்கும் செயல்பாடுகள்(சுருக்கமாக) :*

*ஒரு மனிதன் தன் உடலில் நடக்கும் அணைத்தும் தானே அதாவது Manualலாக செய்ய வேண்டும் என்றால் அவன் தன் வாழ்நாளில்  சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது ஏன் மூச்சுவிடுவதற்க்கு கூட நேரம் இருக்காது.*

*உடலில் உள்ள அணைத்து உறுப்புகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட பல செயல்பாடுகளை உடையது மேலும் அது அழகான வடிவிலும் பொருத்தமான இடத்திலும் அமைந்துள்ளது பேரதிசியம்!!! உதாரணமாக,*

*நாம் நடப்பதற்க்கு மட்டும் நம் கண்(பார்வை),மூளை(சிந்தனை), காது( உள்ளே உள்ள Liquidஇன் Balance),  தசைகள்(புடிப்பு),எழும்புகள்(அசைவு), இதயம்(துடிப்பு), நரம்பு(ரத்த ஓட்டம்) உட்பட பல உறுப்புகளின் செயல்பாடு வேண்டும்! - அணைத்தையும் நாமே செய்ய முடியுமா!*

*ஒரு நாளில் 300 தடவை ஒவ்வொரு துளி ரத்ததையும் இதயம் சுத்திகரிக்கிறது இதை செய்யும் Artificial இயந்திரம் நம் இடுப்பு அளவு உயருமும் பல மின் இனைப்புகளும் உடையது!!!*

*நம் உடலில் உள்ள Liver 200க்கு மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது! - நமக்கு அடிப்பட்டால் அந்த புண் உள்ள இடத்தை சரிசெய்வதும் Liver தான்!!!*

*தாய் வயிற்றில் குழந்தை உருவாகும் நுட்பம் பற்றி சொல்ல தேவையில்லை!!!*

*கண்ணுள்ளே உள்ள பல கோடி Cellகளின் செயல்பாடே நம் பார்வைக்கு தெரியும் காட்சிகள்!!!*

*இன்னும் எண்ணற்ற Automatic செயல்பாடுகளை நீங்கள் internetகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்!!!*

*2) இந்த செயல்பாடுகளுக்கான ஒரே மூலம் ---- உணவு!!!*

*அதுவும் Automaticகாக பசி எண்ணும் உணர்வால் எடுத்துகொள்ளப்படுகிறது!!!*

*நம் உடலுக்கு நாம் எடுக்கும் உணவு முதலில் அரைக்கபட்டு, செரிமானம் செய்யப்பட்டு தேவையுள்ள மற்றும் தேவையற்றவையாக பிரிக்கப்படுகிறது!!!*

*தேவையுள்ளவைகள் ரத்தமாகவும், Energyயாகவும்(அணைத்து உறுப்புகளின் தேவைகேற்ற Energyஆக), பாலாகவும், Acidடாகவும், தேவையுள்ள Gasசாகவும்,உடல் வளர்ச்சிகாகவும், வியர்வையாகவும், எச்சிலாகவும் இன்னும் பல தேவை அடிபடையில் பிரிக்கப்படுகிறது ------- அதுவும் முன்னே சாப்பிட்ட உணவின் மூலம் Automaticகாக!!!*

*அடுத்து தேவையற்றவை மக்கும் மலமாக, Gasசாக, சிறுநீராக , நகமாக, முடியாக  மாற்றப்படுகிறது ----- Automaticகாக!!!*

*3) நோய் ----- ஒரு சிந்தணைக்கு!!!*

*இந்த உலகில் உள்ள பல கோடிக்கணக்கான!!! நோய்களும் நம் உடலில் ஏதேனும் செயல்பாடு குறைவால் ஏற்படுகிறது ---- இதில் நமக்கு கிடைக்கும் விடயம் என்னவென்றால் அத்துணை செயல்பாடுகள் நம் உடலில் நடைபெறுகிறது என்பதே!!!*

*4) இவை அணைத்தும் வெறும் சதை,  எழும்பு,  நரம்பு போன்ற வளுமையற்றவைகளால் நடப்பவை!!!*

*5) இவை அணைத்திற்க்கும் மேல் மனிதனை மற்ற எல்லா படைப்புகளையும் விட சிறப்பாக்குவது!!! - இது போல் நம்மை சிந்திக்கவைக்கும் பகுத்தறிவு, சிந்தனை ஆற்றல்!!!*

*முதல் சிந்தணை :*

*ஒரு Paperலில் "A" என்னும் எழுத்து தானாக உறுவாகியுள்ளது என்று சொன்னால் அதை ஏற்கவே நம் அறிவு மறுத்துவிடுகிறது. ஆனால், இந்த மனிதனை, அவனை சுற்றியுள்ள பல கோடிகணக்காண படைப்புகளை,*
*நுன்னுயிர்🩸🧫🧬, பூச்சிகள்🦟🕸🦗️,பறவைகள்🐣🐧🦅🦚,விலங்குகள்🐰🦁🦍🐫🐘,ஊர்வன🐛🐢🐊,மீன்கள்🐠🐬🐋,தாவரங்கள்🌳🎋🍄🌹🍒🥥🌽,தன்னீர்🌊💦,மனிதன் அவன் அறிவு💭,பிற படைப்புகள்⛰️🌪️🌈❄️🔥......, கிரகங்கள்🌏🪐💫☀️,வானம்🌫️..........Universe..... இன்னும் பல*..‼️ *இதன் வடிவம்,ஆற்றல்,செயல்பாடு - இவை தானாக உறுவாகி வந்து விட்டது என்று சொல்லி அதன் மிக துல்லியமான செயல்படுகளும் தானாக நடைபெறுகிறது என்று சொல்லும் மனித அறிவு எவ்வளவு மோசமானது!!!*

*உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன.*
*(அல்குர்ஆன் : 51:20)*

*ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன?*
*(அல்குர்ஆன் : 51:21)*

*வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்!*
*(அல்குர்ஆன் : 51:22)*

*வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது.*
*(அல்குர்ஆன் : 51:23)*

*இறுதி சிந்தணை :*

*இந்த படைப்புகளை எல்லாம் படைத்து. அதை ஒழுங்குபடுத்தி அதை இயக்கி கொண்டு இருக்கும் இறைவன்.*

*நீங்கள் வணங்கும் நல்ல மனிதனாக, பலராக, மனிதனால் படைக்கப்பட்டவையாக , இறைவனின் தூதராகவோ(அவரும் மனிதனே)  இருக்க முடியுமா!!! உறுதியாக இல்லை என்பதை நம் பகுத்தறிவு உண்மைப்படுத்தும்!!!*

*அல்லாஹ் என்பதற்க்கு முஸ்லிம்கள் கடவுள் என்பது பொருள் அல்ல!!!
*அல்லாஹ்* என்றால் *வணக்கத்திற்க்குரிய ஒரே இறைவனை* குறிக்கும் அரபு மொழிச்சொல்!!!
தமிழில் 'வணக்கத்திற்க்குரிய ஒரே இறைவன்' என்றால் அரபியில் 'அல்லாஹ்'!!! & அல் குர்ஆன் இறைவனின் இறுதி வேதமான இது 1400 ஆண்டுகளுக்கு முன்பு எழுத படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு (இறைவனின் சாந்தி இவர் மீது நிலவட்டுமாக) 23 வருடங்களாக படிபடியாக இரக்கப்பட்டது!.*

*(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.*
*(அல்குர்ஆன் : 112:1)*

*அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.*
*(அல்குர்ஆன் : 112:2)*

*அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.*
*(அல்குர்ஆன் : 112:3)*

*அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.*
*(அல்குர்ஆன் : 112:4)*

*மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.*
*(அல்குர்ஆன் : 22:73)*

*ஈஸா(அலை)அல்லது மஸீஹ்(அலை) என்னும் அரபி வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Jesus(pbuh)* 👇

*வேதம் அருளப்பட்டவர்களே! உங்களுடைய தீனில் மார்க்கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறாதீர்கள். திண்ணமாக, மர்யமின் மகன் ஈஸாஅல்மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார். மேலும், அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு ரூஹும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்! இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போதுமானவனாவான்.*
*(அல்குர்ஆன் : 4:171)*


*(நபியே!) நீர் கூறும்: (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.*

*(அல்குர்ஆன் : 38:86)*

*“இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”*

*(அல்குர்ஆன் : 38:87)*


Al quran Tamil : https://play.google.com/store/apps/details?id=kk.qurantest and 
http://www.tamililquran.com
To hear quran in tamil(mp3) : https://archive.org/details/tamilquranmp3 & http://www.tnmuslims.com/qari/quran-full-arabic-tamil-new-audio/

யார் இந்த முஹம்மது நபி(இறைவனின் சாந்தி இவர்கள் மீது நிலவட்டுமாக) - https://m.facebook.com/story.php?story_fbid=130897998668758&id=100052456744456&ref=bookmarks & http://najibks.blogspot.com/2020/07/300-1-1.html?m=1

Al quran english : https://play.google.com/store/apps/details?id=org.quranproject

Zakir naik (Person who memorized quran, hindu scriptures and Christian Scriptures) - தமிழ் or english
Subscribe this channels in youtube (go to playlist to get needed topic)
*தமிழ்* -  https://www.youtube.com/channel/UCrlTM9aqqnwCdtvMP5dsBwg 
*English* - | DR ZAKIR NAIK: https://www.youtube.com/user/Drzakirchannel

Automatic மனிதன் (சிந்தனை பதிவு ) - https://najibks.blogspot.com/2020/08/automatic-man-fb-httpsm.html?m=1 &
https://m.facebook.com/story.php?story_fbid=158233365935221&id=100052456744456&fs=1&focus_composer=0

Quran and modern science with proofs : https://play.google.com/store/apps/details?id=ummufahmi.android.quran_science_islam

Answer for Misconceptions about islam : http://islamicpamphlets.com/misconceptions-about-islam/

Want to see video of person who came to islam including pastors, hindu scholars and scientists (tamil) and do you want to know the truth of islam contact (tamil) :  https://www.youtube.com/user/waytoparadiseclass












Tuesday, July 14, 2020

யார் முஹம்மது நபி(ஸல்)? விமர்சனங்கள் ஏன்?

*بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ*
*யார் முஹம்மது நபி (இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக)??? - 300மில்லியன் மக்கள் ஆசையுடன் தன் உயிரை விட  மேலாக ஏன் இவர்களை மதிக்கிறார்கள்!!!*

🔥 *முடிவுரையில் விமர்சனுமும் பதிலையும் அறிந்து கொள்ளுங்கள்!!!* 🔥

*1) இறைத்தூதராகும் முன்!!!*

1. (அஸ்-ஸாதிக்) உண்மையாளர் என்று போற்றப்பட்டவர்.

2. (அல்-அமீன்) நம்பிக்கையாளர் என்று போற்றப்பட்டவர்.

3.அநாதை

4. அவர்களின் சமுதாயத்தில் மக்கா கட்டுமான பணியில் ஏற்பட்ட பிரச்சனையை சிறு வயதிலேயே சரிசெய்த நீதியாளர் &  மரியாதைக்குரியவர்.

5. எழுத படிக்க தெரியாதவர்.

6. தன் இளம் 25 வயதிலே 40 வயது விதவையாக இருந்த அண்ணை கதீஜா(ரலி)வுக்கு மறுவாழ்வு தந்தார்.

7.பணம் தேவை இல்லாத சிறந்த செல்வந்தர், வியாபாரி.

இன்னும் ஏராளம்!!!


*2) இறைத்துதராக (இறைகோட்பாட்டை மக்கள் மறந்து அறியாமையிலும்,  அநியாயத்திலும் இருந்த போது!!! இறைவன் தன் வழியை நிணைவூபடுத்த இறுதி இறைத்தூதராக 40 வயதில் இவர்களை தேர்ந்தெடுதான்!!!)*

1.மேல் குறிபிட்டதற்க்கு அப்படியே மாற்றமாக பொய்யர் என்றும் சூனியகாரர் என்றும் அந்த மக்கள் சொல்லி அவமானபடுத்தபட்டார்.

2. ஆட்சி வேண்டுமா, சிறந்த பெண் வேண்டுமா அல்லது பொருளாதாரம் வேண்டுமா இந்த செய்தியை சொல்லாதே என்று அந்த சமூக மக்கள் சொன்ன போது மிக உறுதியாக மறுத்தார்கள்.

3. தன் சொந்தகாரர்களாலேயே பல கொடுமைகளுக்கு உட்படுத்தபட்டார்.

4. மூன்று வருடம் ஊர் நீக்கம் செய்யபட்டு!!! சிறுவர்கள் மூலம் கல்லால் அடித்து சென்ற இடமெல்லாம் விரட்டபட்டார்!!!

5. இறைவனிடம் இருந்து வரும் செய்தியல்லவா! ஆதலால், எழுத படிக்க தெரியாமல் இருந்தும் இந்த செய்தியை எவ்வாறு சொல்கிறார் என்று - தங்கள் மூல மோழியில் உள்ள வேத செய்திகளை அப்படியே சொன்னதால் நஜ்ஜாஷி மன்னர் உட்பட வேதஞானமுள்ள மக்கள், அடிமைகள், ஏள்மையானவர்கள்,  அணைவரும் கவரபட்டனர். அதனால், மக்கா நகருக்கு வருபவர்கள் அணைவரிடமும் இவர் பைத்தியகாரர், சூனியகாரர்,  மிகைபடுத்தி பேசும் கவிஞர் என்று பரப்பட்டது!!!

6. முக்கியமான நபர்களும் இது சத்தியம் என அறிந்த இஸ்லாத்தில் இணைந்தனர் அவர்களும் துண்புறுத்தபட்டனர், பலர் கொல்லப்பட்டனர்!!!

7. பின்பு முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபியை கொலை செய்ய திட்டமிட்டு பல முயற்சிகள் எடுக்கபட்டு இறைவனின் அருளால் காபாற்றபட்டார்.

8. பின்பு சொந்த ஊரையே விட்டு மதினா என்னும் நகருக்கு புறப்பட வைத்தார்கள்.

9. கல் நெஞ்சம் படைத்த எதிரிகள் பல போர்களை தொடுத்தனர் இவர்கள் சிறு கூட்டமாக இருந்தும் இறைவனின் அருளால் வெற்றி அடைந்தனர்.

10. மக்கள் சத்தியத்தை அறிந்து இப்போழுது அமேரிக்கவிலும் இங்கிலாந்திலும் இஸ்லாத்தை மக்கள் ஏற்று கொள்வது போல் சமூகம் சமூகமாக இஸ்லாத்தை ஏற்று இன்று ஒருவரில் இருந்து 300 மில்லியனாக ஆகியுள்ளது!!! இறைவனின் நாட்டதால் நீங்களும் அறியலாம்!!!


*3) இறைசட்டம் செய்த சாதணைகள் - (இந்த சாதணைகள் வெறும் 23 ஆண்டுகள் மட்டுமே இறைத்தூதராக இருந்த 1400 வருடங்களுக்கு முன்பு சாத்தியமற்ற இறைவனின் உதவியால் மட்டுமே செய்யபட்டது என்பதற்க்கும் போதுமான சான்று!!!)*

1. ஒரே இறைவனை வணங்கும் ஒற்றை சமூகம்.

2. தனியாக, குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்று முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி மூலம் Practical லாக இறைவன் வழிகாட்டினான்!!!

3. தீண்டாமை தகர்த்து ஏறியபட்டது.

4. சகோதரதுவம் நிலைநாட்டபட்டது.

(பெண்களுக்கு உயிர் இருக்கா இல்லையா என்று ரோமர்களும் , பாரசீகர்களும் கொலை செய்து பார்த்த, இந்தியாவில் சதீ(Sati) என்று பெண்கள் கொல்லபட்ட காலகட்டம்.....ஆனால் இஸ்லாம்!!!)
5. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது.

6. கணவனை மணப்பெண்தான் தீர்மானிக்க வேண்டும்.

7.ஆண்களே பெண்களுக்கு மணக்கொடையை கொடுக்க வேண்டும் என்ற சட்டம் மூலம்(வரதட்சனை ஒழிக்கபட்டது).

8. பெண் சிசு கொலையை கண்டித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இரக்கியதால் அதுவும் ஒழிக்கபட்டது!!!

9. மது ஒழிக்கபட்டது(தன் வீடுகளில் மது காய்ச்சி அருந்தியவர்கள்!!!)

10. திருமணம் அல்லாத தீய உறவு (விபச்சாரம்)ஒழிக்கபட்டது (தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏத்தி விபச்சாரத்திற்க்கு அழைத்த பெண்களாக இருந்தவர்கள்!!!).

11. நற்குணத்தை முழுமைபடுத்த வந்தவர் என்பதால் நற்குணமான சமூகமாக மாறினார்கள்(கேரளாவில் முஸ்லிம்களின் குணம், வியாபரத்தில் நேர்மை ஆகியவற்றை பார்த்தே  முதல் முறையாக இந்தியாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது)

12. சிவில் & கிரிமினல் சட்டங்கள் அணைவருக்கும் ஒரே போல வரையறை செய்யபட்டது.(தன் மகள் ஃபாத்திமா திருடினாலும் கை வெட்டபடும் என்று முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி சொன்னது நீங்கள் அறிந்ததே!!!)

13. வட்டி ஒழிக்கபட்டது. (இஸ்லாமிய நாடுகளில் வங்கிகளில் வட்டி இல்லை)

இன்னும் ஏராளம்.....


*4) முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி பற்றியும் மற்றும் அவர்களின் ஒரு சில போதனைகள் உங்கள் சிந்தனைக்கு!!!*

1. இறைகோட்பாடு & தீண்டாமை (பேச்சில் அல்ல செயல்பாட்டில் இப்பொழுதும் தொழுகையில் நீங்கள் கவணிக்கலாம்!!!)
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(நூல் : அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

2. முன் சென்று இறைதூதரை விட நான் சிறந்தவன் என்று சொல்ல தடை செய்த
முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: '(இறுதித் தூதரான) நான் (இறைத்தூதர்) யூனுஸ்(prophet jonah) இப்னு மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர்' என்று சொல்வது எந்த அடியானுக்கும் தகாது. இவ்வாறு (யூனுஸ்) இப்னு மத்தா - மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 179
ஸஹீஹ் புகாரி : 7539.
அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு

3. அவர்களின் வாழ்க்கை ------- இறைவனின் அடிமையாய், இறைதூதராய், ஜனாதிபதியாய் , போர் தளபதியாய் , இன்றைய காலம் வரை ஆட்சியாளர்களிலேயே மிகவும் ஏழையாய்......... இருந்தவர் ---------

ஆயிஷா(ரலி) அறிவித்தார்
முப்பது 'ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் *அடைமானம் வைக்கப்படடிருந்த நிலையில் ( முஹம்மது) நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.*
ஸஹீஹ் புகாரி : 4467.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
وعن عائشة رضي الله عنها قالت: كان يخيط ثوبه ويخصف نعله ويعمل ما يعمل الرجال في بيوتهم - رواه أحمد.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது கிழிந்த ஆடைகளையும், அறுந்த செறுப்பையும்  தாங்களே தைத்து சரி செய்து  கொள்வார்கள்.மேலும்  ஆண்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை செய்வார்கள்  என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் :அஹ்மத் )
ما انتقم رسول الله صلى الله عليه وسلم لنفسه قط ولا غضب لنفسه قط (متفق عليه)
நபி ( ஸல்) அவர்கள் ஒரு போதும் தமது சொந்த காரணத்திற்காக யாரையும் கோபித்துக் கொண்டதோ பலிவாங்கியதோ கிடையாது என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா  
கூறினார்கள்

.
4. இறைவனின் பாதையில் போரா? தாய்யா? எது முக்கியம்!!!(சிறு கூட்டமாக இருந்தார்கள்.. போருக்கு ஆட்கள் தேவைபட்டது ஆனால்!!!)

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு' என்றார்கள்.3
ஸஹீஹ் புகாரி : 5972.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்

5. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்' அல்லது 'அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது'. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)' என்று கூறிவிட்டு,'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று கேட்டார்கள். 'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம்' (மிகப் பெரும் பாவமாகும்)' என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்:
'பொய் சாட்சியம்' என்றே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றே நான் அநேகமாகக் கருதுகிறேன்.
ஸஹீஹ் புகாரி : 5977.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்

6. இறைத்தூதர்  (ﷺ) கூறினார்கள் :
ஒருவரிடம்
பணிவான நடத்தையும்,
கனிவான குணமும்,
எப்பொழுதும் எளிதாக
நெருங்கக்கூடிய தன்மையும் ,
இருக்கின்றோதோ ,
அவரை நரக நெருப்பு தீண்டாது ."
என இப்னு மசூத் ( ரலி ) அவர்கள் அறிவித்தார்கள்.
சஹீஹ் # திர்மிதி # 642#

7. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5991.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்

8. - 5143. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:  (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்.

9. மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

10. அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைக்கப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

11. கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

12. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம். மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கு இடமளியுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
📚 ஸஹீஹ் முஸ்லிம்

13. மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

இன்னும் ஏராளம்....


🔥 *****5) முஹம்மது (இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி பற்றிய இரண்டு முக்கியமான விமர்சனங்கள்****** 🔥

1. இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா? (வாள் என்ற சொல்லே குர்ஆனில் இல்லை!!!)

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; *மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”* என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 5:32)

*போரா? தாய்யா?* எது முக்கியம்!!!(சிறு கூட்டமாக இருந்தார்கள்.. போருக்கு ஆட்கள் தேவைபட்டது ஆனால்!!!)

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு' என்றார்கள்.3
ஸஹீஹ் புகாரி : 5972.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்


2. பல திருமனங்கள் ஏன் நபி(ஸல்) முடித்தார்கள் என்று கேட்பவர்கள்!!!
இந்த கட்டுரையை படியுங்கள் புரியும்!!!

a, பெண்ணாசை இருந்தால் தன் இளம் வயதில் விதவையை திருமனம் முடிபார்களா.

b, அவர்கள் பிரச்சாரத்தின் முதல் கட்டத்திலே ஆட்சி வேண்டுமா, *சிறந்த பெண் வேண்டுமா* அல்லது பொருளாதாரம் வேண்டுமா இந்த செய்தியை சொல்லாதே என்று அந்த சமூக மக்கள் சொன்ன போது மிக உறுதியாக மறுத்தார்கள்.

c, அந்த காலகட்டதில் ஏன் அணைத்து வேதங்களிளும் ஆயிரகனக்கில் திருமணம் முடித்த கடவுள்கள் என்றும் இறைதூதர்கள் என்றும் சொல்லபட்டுள்ளதை மறுக்க முடியுமா!!!

d, ஆனால், முஹம்மது (இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி வரலாற்றை முழுமையாக படித்தால் அவர்களின் மனைவிமார்களுக்கு அவர்கள் கூடுத்த உரிமை, கண்ணியம், மரியாதையே அதை உங்களுக்கு புரியே வைக்கும்!!! 

e, ஏன் தன்னை திருமணம் செய்ய ஆசைபட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்து உள்ளர்களே!!! அதையெல்லாம் பார்க்க மாட்டீர்களா!!!

இன்னும் என்னற்ற காரணங்களை அவர்களின்  வரலாற்றை படிப்பதன் மூலம் புரிந்து விளங்கி கொள்ளலாம்!!!.....
(முழுமையான வரலாறு - http://www.islamkalvi.com/?p=4989 )
*அல்ஹம்துலில்லாஹ்(எல்லா புகழும் இறைவனுக்கே!!!)*


















Tuesday, February 14, 2017