Tuesday, July 14, 2020

யார் முஹம்மது நபி(ஸல்)? விமர்சனங்கள் ஏன்?

*بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ*
*யார் முஹம்மது நபி (இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக)??? - 300மில்லியன் மக்கள் ஆசையுடன் தன் உயிரை விட  மேலாக ஏன் இவர்களை மதிக்கிறார்கள்!!!*

🔥 *முடிவுரையில் விமர்சனுமும் பதிலையும் அறிந்து கொள்ளுங்கள்!!!* 🔥

*1) இறைத்தூதராகும் முன்!!!*

1. (அஸ்-ஸாதிக்) உண்மையாளர் என்று போற்றப்பட்டவர்.

2. (அல்-அமீன்) நம்பிக்கையாளர் என்று போற்றப்பட்டவர்.

3.அநாதை

4. அவர்களின் சமுதாயத்தில் மக்கா கட்டுமான பணியில் ஏற்பட்ட பிரச்சனையை சிறு வயதிலேயே சரிசெய்த நீதியாளர் &  மரியாதைக்குரியவர்.

5. எழுத படிக்க தெரியாதவர்.

6. தன் இளம் 25 வயதிலே 40 வயது விதவையாக இருந்த அண்ணை கதீஜா(ரலி)வுக்கு மறுவாழ்வு தந்தார்.

7.பணம் தேவை இல்லாத சிறந்த செல்வந்தர், வியாபாரி.

இன்னும் ஏராளம்!!!


*2) இறைத்துதராக (இறைகோட்பாட்டை மக்கள் மறந்து அறியாமையிலும்,  அநியாயத்திலும் இருந்த போது!!! இறைவன் தன் வழியை நிணைவூபடுத்த இறுதி இறைத்தூதராக 40 வயதில் இவர்களை தேர்ந்தெடுதான்!!!)*

1.மேல் குறிபிட்டதற்க்கு அப்படியே மாற்றமாக பொய்யர் என்றும் சூனியகாரர் என்றும் அந்த மக்கள் சொல்லி அவமானபடுத்தபட்டார்.

2. ஆட்சி வேண்டுமா, சிறந்த பெண் வேண்டுமா அல்லது பொருளாதாரம் வேண்டுமா இந்த செய்தியை சொல்லாதே என்று அந்த சமூக மக்கள் சொன்ன போது மிக உறுதியாக மறுத்தார்கள்.

3. தன் சொந்தகாரர்களாலேயே பல கொடுமைகளுக்கு உட்படுத்தபட்டார்.

4. மூன்று வருடம் ஊர் நீக்கம் செய்யபட்டு!!! சிறுவர்கள் மூலம் கல்லால் அடித்து சென்ற இடமெல்லாம் விரட்டபட்டார்!!!

5. இறைவனிடம் இருந்து வரும் செய்தியல்லவா! ஆதலால், எழுத படிக்க தெரியாமல் இருந்தும் இந்த செய்தியை எவ்வாறு சொல்கிறார் என்று - தங்கள் மூல மோழியில் உள்ள வேத செய்திகளை அப்படியே சொன்னதால் நஜ்ஜாஷி மன்னர் உட்பட வேதஞானமுள்ள மக்கள், அடிமைகள், ஏள்மையானவர்கள்,  அணைவரும் கவரபட்டனர். அதனால், மக்கா நகருக்கு வருபவர்கள் அணைவரிடமும் இவர் பைத்தியகாரர், சூனியகாரர்,  மிகைபடுத்தி பேசும் கவிஞர் என்று பரப்பட்டது!!!

6. முக்கியமான நபர்களும் இது சத்தியம் என அறிந்த இஸ்லாத்தில் இணைந்தனர் அவர்களும் துண்புறுத்தபட்டனர், பலர் கொல்லப்பட்டனர்!!!

7. பின்பு முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபியை கொலை செய்ய திட்டமிட்டு பல முயற்சிகள் எடுக்கபட்டு இறைவனின் அருளால் காபாற்றபட்டார்.

8. பின்பு சொந்த ஊரையே விட்டு மதினா என்னும் நகருக்கு புறப்பட வைத்தார்கள்.

9. கல் நெஞ்சம் படைத்த எதிரிகள் பல போர்களை தொடுத்தனர் இவர்கள் சிறு கூட்டமாக இருந்தும் இறைவனின் அருளால் வெற்றி அடைந்தனர்.

10. மக்கள் சத்தியத்தை அறிந்து இப்போழுது அமேரிக்கவிலும் இங்கிலாந்திலும் இஸ்லாத்தை மக்கள் ஏற்று கொள்வது போல் சமூகம் சமூகமாக இஸ்லாத்தை ஏற்று இன்று ஒருவரில் இருந்து 300 மில்லியனாக ஆகியுள்ளது!!! இறைவனின் நாட்டதால் நீங்களும் அறியலாம்!!!


*3) இறைசட்டம் செய்த சாதணைகள் - (இந்த சாதணைகள் வெறும் 23 ஆண்டுகள் மட்டுமே இறைத்தூதராக இருந்த 1400 வருடங்களுக்கு முன்பு சாத்தியமற்ற இறைவனின் உதவியால் மட்டுமே செய்யபட்டது என்பதற்க்கும் போதுமான சான்று!!!)*

1. ஒரே இறைவனை வணங்கும் ஒற்றை சமூகம்.

2. தனியாக, குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்று முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி மூலம் Practical லாக இறைவன் வழிகாட்டினான்!!!

3. தீண்டாமை தகர்த்து ஏறியபட்டது.

4. சகோதரதுவம் நிலைநாட்டபட்டது.

(பெண்களுக்கு உயிர் இருக்கா இல்லையா என்று ரோமர்களும் , பாரசீகர்களும் கொலை செய்து பார்த்த, இந்தியாவில் சதீ(Sati) என்று பெண்கள் கொல்லபட்ட காலகட்டம்.....ஆனால் இஸ்லாம்!!!)
5. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது.

6. கணவனை மணப்பெண்தான் தீர்மானிக்க வேண்டும்.

7.ஆண்களே பெண்களுக்கு மணக்கொடையை கொடுக்க வேண்டும் என்ற சட்டம் மூலம்(வரதட்சனை ஒழிக்கபட்டது).

8. பெண் சிசு கொலையை கண்டித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இரக்கியதால் அதுவும் ஒழிக்கபட்டது!!!

9. மது ஒழிக்கபட்டது(தன் வீடுகளில் மது காய்ச்சி அருந்தியவர்கள்!!!)

10. திருமணம் அல்லாத தீய உறவு (விபச்சாரம்)ஒழிக்கபட்டது (தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏத்தி விபச்சாரத்திற்க்கு அழைத்த பெண்களாக இருந்தவர்கள்!!!).

11. நற்குணத்தை முழுமைபடுத்த வந்தவர் என்பதால் நற்குணமான சமூகமாக மாறினார்கள்(கேரளாவில் முஸ்லிம்களின் குணம், வியாபரத்தில் நேர்மை ஆகியவற்றை பார்த்தே  முதல் முறையாக இந்தியாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது)

12. சிவில் & கிரிமினல் சட்டங்கள் அணைவருக்கும் ஒரே போல வரையறை செய்யபட்டது.(தன் மகள் ஃபாத்திமா திருடினாலும் கை வெட்டபடும் என்று முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி சொன்னது நீங்கள் அறிந்ததே!!!)

13. வட்டி ஒழிக்கபட்டது. (இஸ்லாமிய நாடுகளில் வங்கிகளில் வட்டி இல்லை)

இன்னும் ஏராளம்.....


*4) முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி பற்றியும் மற்றும் அவர்களின் ஒரு சில போதனைகள் உங்கள் சிந்தனைக்கு!!!*

1. இறைகோட்பாடு & தீண்டாமை (பேச்சில் அல்ல செயல்பாட்டில் இப்பொழுதும் தொழுகையில் நீங்கள் கவணிக்கலாம்!!!)
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(நூல் : அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

2. முன் சென்று இறைதூதரை விட நான் சிறந்தவன் என்று சொல்ல தடை செய்த
முஹம்மது(இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: '(இறுதித் தூதரான) நான் (இறைத்தூதர்) யூனுஸ்(prophet jonah) இப்னு மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர்' என்று சொல்வது எந்த அடியானுக்கும் தகாது. இவ்வாறு (யூனுஸ்) இப்னு மத்தா - மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 179
ஸஹீஹ் புகாரி : 7539.
அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு

3. அவர்களின் வாழ்க்கை ------- இறைவனின் அடிமையாய், இறைதூதராய், ஜனாதிபதியாய் , போர் தளபதியாய் , இன்றைய காலம் வரை ஆட்சியாளர்களிலேயே மிகவும் ஏழையாய்......... இருந்தவர் ---------

ஆயிஷா(ரலி) அறிவித்தார்
முப்பது 'ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் *அடைமானம் வைக்கப்படடிருந்த நிலையில் ( முஹம்மது) நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.*
ஸஹீஹ் புகாரி : 4467.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
وعن عائشة رضي الله عنها قالت: كان يخيط ثوبه ويخصف نعله ويعمل ما يعمل الرجال في بيوتهم - رواه أحمد.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது கிழிந்த ஆடைகளையும், அறுந்த செறுப்பையும்  தாங்களே தைத்து சரி செய்து  கொள்வார்கள்.மேலும்  ஆண்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை செய்வார்கள்  என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் :அஹ்மத் )
ما انتقم رسول الله صلى الله عليه وسلم لنفسه قط ولا غضب لنفسه قط (متفق عليه)
நபி ( ஸல்) அவர்கள் ஒரு போதும் தமது சொந்த காரணத்திற்காக யாரையும் கோபித்துக் கொண்டதோ பலிவாங்கியதோ கிடையாது என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா  
கூறினார்கள்

.
4. இறைவனின் பாதையில் போரா? தாய்யா? எது முக்கியம்!!!(சிறு கூட்டமாக இருந்தார்கள்.. போருக்கு ஆட்கள் தேவைபட்டது ஆனால்!!!)

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு' என்றார்கள்.3
ஸஹீஹ் புகாரி : 5972.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்

5. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்' அல்லது 'அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது'. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)' என்று கூறிவிட்டு,'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று கேட்டார்கள். 'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம்' (மிகப் பெரும் பாவமாகும்)' என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்:
'பொய் சாட்சியம்' என்றே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றே நான் அநேகமாகக் கருதுகிறேன்.
ஸஹீஹ் புகாரி : 5977.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்

6. இறைத்தூதர்  (ﷺ) கூறினார்கள் :
ஒருவரிடம்
பணிவான நடத்தையும்,
கனிவான குணமும்,
எப்பொழுதும் எளிதாக
நெருங்கக்கூடிய தன்மையும் ,
இருக்கின்றோதோ ,
அவரை நரக நெருப்பு தீண்டாது ."
என இப்னு மசூத் ( ரலி ) அவர்கள் அறிவித்தார்கள்.
சஹீஹ் # திர்மிதி # 642#

7. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5991.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்

8. - 5143. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:  (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்.

9. மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

10. அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைக்கப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

11. கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

12. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம். மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கு இடமளியுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
📚 ஸஹீஹ் முஸ்லிம்

13. மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

இன்னும் ஏராளம்....


🔥 *****5) முஹம்மது (இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி பற்றிய இரண்டு முக்கியமான விமர்சனங்கள்****** 🔥

1. இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா? (வாள் என்ற சொல்லே குர்ஆனில் இல்லை!!!)

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; *மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”* என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 5:32)

*போரா? தாய்யா?* எது முக்கியம்!!!(சிறு கூட்டமாக இருந்தார்கள்.. போருக்கு ஆட்கள் தேவைபட்டது ஆனால்!!!)

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு' என்றார்கள்.3
ஸஹீஹ் புகாரி : 5972.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்


2. பல திருமனங்கள் ஏன் நபி(ஸல்) முடித்தார்கள் என்று கேட்பவர்கள்!!!
இந்த கட்டுரையை படியுங்கள் புரியும்!!!

a, பெண்ணாசை இருந்தால் தன் இளம் வயதில் விதவையை திருமனம் முடிபார்களா.

b, அவர்கள் பிரச்சாரத்தின் முதல் கட்டத்திலே ஆட்சி வேண்டுமா, *சிறந்த பெண் வேண்டுமா* அல்லது பொருளாதாரம் வேண்டுமா இந்த செய்தியை சொல்லாதே என்று அந்த சமூக மக்கள் சொன்ன போது மிக உறுதியாக மறுத்தார்கள்.

c, அந்த காலகட்டதில் ஏன் அணைத்து வேதங்களிளும் ஆயிரகனக்கில் திருமணம் முடித்த கடவுள்கள் என்றும் இறைதூதர்கள் என்றும் சொல்லபட்டுள்ளதை மறுக்க முடியுமா!!!

d, ஆனால், முஹம்மது (இறைவனின் அமைதி இவர்கள் மீது நிலவட்டுமாக) நபி வரலாற்றை முழுமையாக படித்தால் அவர்களின் மனைவிமார்களுக்கு அவர்கள் கூடுத்த உரிமை, கண்ணியம், மரியாதையே அதை உங்களுக்கு புரியே வைக்கும்!!! 

e, ஏன் தன்னை திருமணம் செய்ய ஆசைபட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்து உள்ளர்களே!!! அதையெல்லாம் பார்க்க மாட்டீர்களா!!!

இன்னும் என்னற்ற காரணங்களை அவர்களின்  வரலாற்றை படிப்பதன் மூலம் புரிந்து விளங்கி கொள்ளலாம்!!!.....
(முழுமையான வரலாறு - http://www.islamkalvi.com/?p=4989 )
*அல்ஹம்துலில்லாஹ்(எல்லா புகழும் இறைவனுக்கே!!!)*


















Tuesday, February 14, 2017